சென்னை: குற்றங்களை தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும்; வேல்முருகன்

85பார்த்தது
சென்னை: குற்றங்களை தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும்; வேல்முருகன்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. ஆனால் பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க, சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் 400-க்கும் மேற்பட்டோர் இணைந்தனர். இந்நிகழ்வு சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டு, புதிதாக கட்சியில் இணைந்த நபர்களுக்கு கட்சியின் துண்டு அணிவித்து வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் வேல்முருகன் கூறியதாவது, டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு ரூ. 10, ரூ. 20 கூடுதலாக வாங்குவது தங்கள் கட்சிகள் நேரடியான கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான முறைகேடுகளில் ரூ. 1,000 கோடியா, ரூ. 5,000 கோடியா அல்லது ரூ. 10,000 கோடியா என்பதை நேர்மையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, டாஸ்மாக்கில் நடைபெறக்கூடிய முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, தவறு இழைத்தவர்கள் மீது சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி