உசிலம்பட்டி ‘58 கிராம பாசன கால்வாய்’ திட்டத்தை அழித்தொழிக்கும் கல்குவாரிகள் மீண்டும் செயல்பட தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் அமைந்துள்ள 58 கிராம பாசனத் திட்டத்தின் கால்வாயின் தொட்டிப் பாலத்திற்குச் சேதம் விளைவிக்கும் வகையில் கல்குவாரிகள் நடத்த தமிழ்நாடு அரசு ஆய்வுகளை மேற்கொள்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
உசிலம்பட்டி பகுதி மக்கள் இரண்டு தலைமுறைக்கும் மேல் போராடி அரும்பாடுபட்டுப் பெற்ற 58 கிராம பாசனத் திட்டத்தினைச் சிதைக்கும் வகையில் கல்குவாரிகள் மீண்டும் செயல்பட தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது, அதற்கென எவ்வித ஆய்வும் மேற்கொள்ளக் கூடாதெனவும் வலியுறுத்துகிறேன்.
கல்குவாரிகளுக்கு எதிராக உசிலம்பட்டி 58 கிராம பாசனப் பகுதி மக்கள் மேற்கொள்ளும் அறப்போராட்டக் கோரிக்கை வெல்லும்வரை நாம் தமிழர் கட்சி தோள்கொடுத்து துணைநிற்கும் என்பதையும் என தெரிவித்துள்ளார்.