தேர்தல் பணிக்கு கூடுதலாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

163பார்த்தது
தேர்தல் பணிக்கு கூடுதலாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவின்படி, விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளுக்காக இந்திய தேர்தல் கமிஷனின் முதன்மை செயலாளரின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரிகள் இருவர் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி சிவஞானம் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாகவும், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணை தலைமை செயல் அதிகாரி ஷ்ருதஞ்சய் நாராயணன் இணை தலைமை தேர்தல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி