சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்தார். மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு வீடுகள் மற்றும் புதிய நலத்திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் தூய்மைப் பணியாளர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ளது.