கஞ்சா கடத்தல்: பெண் உட்பட மூன்று பேர் கைது

233பார்த்தது
கஞ்சா கடத்தல்: பெண் உட்பட மூன்று பேர் கைது
எண்ணுார் முகத்துவார மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார், பொன்னேரியிலிருந்து எண்ணுார் நோக்கி வந்த ஆட்டோவை மடக்கி சோதனையிட்டதில், மூன்று கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக காஞ்சிபுரம், ஈஞ்சம்பாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை பகுதிகளைச் சேர்ந்த சித்ரா (34), மாதவன் (26), கேசவன் (34) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவிலிருந்து மொத்தமாக வாங்கி சென்னை வழியாக காஞ்சிபுரம் கொண்டு சென்று விற்பனை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சித்ரா மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை வழக்கு உள்ளது.