சென்னையில் தண்டவாளங்களை கடக்க முயன்ற 384பேர் மீது வழக்கு

286பார்த்தது
சென்னையில் தண்டவாளங்களை கடக்க முயன்ற 384பேர் மீது வழக்கு
எழும்பூர் ரெயில் நிலையப் பகுதியில் தண்டவாளங்களைக் கடக்க முயன்ற பயணிகள் மீது ரெயில்வே பாதுகாப்புப் படையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 384 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ. 1 லட்சத்து 71 ஆயிரத்து 450 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே தண்டவாளங்களைக் கடப்பது குற்றமாகும் என்றும், பயணிகள் ஒதுக்கப்பட்ட வழித்தடங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ரெயில்வே பாதுகாப்புப் படையினர் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி