சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேம்குமார்(25) என்பவர் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக வந்துள்ளார். இந்நிலையில் அவர் அசந்த நேரத்தில், மர்மநபர் செல்போனை திருடி சென்றார். இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில், கீழ்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் திருடிய ஜெயராம் (35)என்பவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்