சென்னையைச் சேர்ந்த மகாலிங்கம் - ருக்மணி தம்பதி, ரயிலில் நகை திருடுபோனதாக நாடகம் ஆடி, அதற்கான இன்சூரன்ஸ் பணத்தைப் பெற்று மோசடி செய்ததாக விழுப்புரம் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 140 கிராம் நகைகள் மற்றும் ரூ.30.80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி சம்பவத்தில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.