சென்னை தேனாம்பேட்டை பகுதியில் பெண் ஒருவர் தனது இரு மகள்களுடன் வசித்து வருகிறார். சம்பவதினத்தன்று அவர் வேலைக்கு சென்றுள்ளார். சிறுமிகள் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் வினோத் அங்கு சென்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமிகளின் தயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வினோத் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.