தேர்வுக்களம் செல்போன் செயலியை தொடங்கி வைத்த முதல்வர்

1பார்த்தது
தேர்வுக்களம் செல்போன் செயலியை தொடங்கி வைத்த முதல்வர்
சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு அரசின் அனைத்து தேர்வு முகமைகள் மூலம் செய்யப்படும் பணியாளர்கள் தேர்வுகள் தொடர்பான செயல்முறைகளை எளிமைப்படுத்தும் "தேர்வுக்களம்" எனும் ஒருங்கிணைந்த கைபேசி செயலியையும், அரசு அலுவலர்கள் இணையவழியில் தங்களுடைய திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில் பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கும் “திறன் 360°” வலைவாசலையும் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த புதிய செயலிகள் மற்றும் வலைவாசல் மூலம் அரசுப் பணியாளர் தேர்வு முறைகள் எளிமையாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி