லட்சக்கணக்கான சென்னை மக்களின் போக்குவரத்துக்கு துணை நிற்கும் மாநகர பேருந்து சேவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் BUSFIRST எனும் விழிப்புணர்வு பரப்புரையை துணை முதல்வர் அண்ணா சதுக்கம் அருகே நேற்று தொடங்கி வைத்தார். MTC பேருந்துகளுக்கு முன்னுரிமை தந்து பயணிப்பது, சாலைகளில் கார், பைக் போன்றவற்றின் மூலம் இடையூறு ஏற்படுத்தாமல் இருப்பது உள்ளிட்ட கருத்துக்களை முன்வைத்து இந்த பரப்புரை மேற்கொள்ளப்படவுள்ளது.