நவம்பர் 21 முதல் 30 வரை அபுதாபியில் நடைபெறும் உலக சீனியர்ஸ் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கச் செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 கிக் பாக்ஸிங் வீரர், வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலா ரூ. 1.75 லட்சம் என மொத்தம் ரூ. 19.25 லட்சம் நிதியுதவி வழங்கி, வெற்றிபெற வாழ்த்துகளைத் தெரிவித்தார்.