வாகனங்களில் பேட்டரி திருடிய முதியவர் கைது

5பார்த்தது
வாகனங்களில் பேட்டரி திருடிய முதியவர் கைது
புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(66) என்பவரின் வீட்டில், மாடிப்படியின் கீழ் வைக்கப்பட்டிருந்த எட்டு வாகனங்களின் பேட்டரிகளை மர்ம நபர் திருடிச் சென்றார். இது குறித்து அண்ணா சாலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆந்திர மாநிலம் நெல்லுாரைச் சேர்ந்த சங்கரையா(60) என்பவர் பேட்டரிகளை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி