சென்னை: எம்எல்ஏ விடுதிக்குள் அத்துமீறல்: அமலாக்கத்துறை மீது வழக்குப்பதிவு

73பார்த்தது
சென்னை: எம்எல்ஏ விடுதிக்குள் அத்துமீறல்: அமலாக்கத்துறை மீது வழக்குப்பதிவு
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சென்னையில் அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தச் சென்றபோது ஒரு அறையை உடைத்து சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியில் அமைச்சர் மகனும் எம்எல்ஏவுமான ஐ. பி. செந்தில் குமாருக்கு ஒதுக்கப்பட்ட அறையிலும் சோதனை நடைபெற்றது. எம்எல்ஏ விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து சோதனை செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது சட்டப்பேரவை செயலர் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.