சென்னை மெரினா அருகே நொச்சிக் குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர் கோபி, மூன்று மீனவர்களுடன் பைபர் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகு காற்றில் சாய்ந்து கடலில் தவறி விழுந்தார். கடலில் ஏற்பட்ட சுழலில் சிக்கி அவர் உயிரிழந்தார். சக மீனவர்கள் அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.