சென்னை பட்டினப்பாக்கத்தில் கடந்த அக்டோபர் 22-ம் தேதி ஏற்பட்ட நுரை விவகாரத்தில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்துள்ளது. கழிவுநீர் வெளியேற்றத்தால் ஏற்படும் இந்த நுரை, கடும் சுகாதார அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் எனக் கவலை தெரிவித்த தீர்ப்பாயம், இதுகுறித்து ஜனவரி 19-க்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுத் துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.