உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் மெரினா, எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்ற இடங்களில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி, 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காதலர்களை மிரட்டுபவர்கள் மற்றும் பொது இடங்களில் எல்லை மீறும் காதல் ஜோடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.