திருவல்லிக்கேணி வி. ஆர் பிள்ளை தெருவில் குஜராத்தை சேர்ந்த தராம்சந்த் என்பவர் அடகு கடை நடத்தி வந்தார். பலரும் இங்கு நகைகளை அடகு வைத்திருந்தனர். இன்று நகைகளை மீட்க வந்த பெண்கள் கடை பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் சுமார் 100 கிராம் தங்க நகைகளுடன் கடை உரிமையாளர் தராம்சந்த் மாயமானது தெரியவந்துள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.