தி. நகரில் அஞ்சல் குறைதீர் முகாம்: 9ஆம் தேதி நடக்கிறது

3பார்த்தது
தி. நகரில் அஞ்சல் குறைதீர் முகாம்: 9ஆம் தேதி நடக்கிறது
தி. நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், சென்னை மத்திய மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர் முகாம் வரும் 9ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. அஞ்சல்துறை மற்றும் பொருட்கள் சேவைகள் தொடர்பான குறைகளை கோட்ட அளவிலான மன்றத் தலைவர் விசாரிப்பார். வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை நாளைக்குள் சென்னை நகர மத்திய கோட்ட முதுநிலை கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும். கீழ்நிலை அஞ்சலகங்களில் தீர்வு காணப்படாத புகார்கள் மட்டுமே முகாமில் எடுத்துக் கொள்ளப்படும். புதிய புகார்கள் ஏற்கப்படாது. புகார்களை தபால் மூலமாகவோ அல்லது dochennaicitycentral@indiapost.gov.in மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.

தொடர்புடைய செய்தி