ராயப்பேட்டை ஸ்மித் சாலை சந்திப்பு பகுதியில் ஒரு வாரமாக கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சத்யம் திரையரங்கம், ராயப்பேட்டை மருத்துவமனை, பிப் அலுவலகம், எக்ஸ்பிரஸ் அவன்யூ போன்ற முக்கிய இடங்களுக்கு செல்லும் மக்கள் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால், அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேட்டை சரிசெய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.