திருவல்லிக்கேணியில் மனநலம் பாதிக்கப்பட்ட 19 வயது மாணவி காணாமல் போன நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. கடந்த 13ம் தேதி வீட்டிலிருந்து வெளியேறிய மாணவியை, சமூக வலைத்தளம் மூலம் பழக்கத்தை ஏற்படுத்தி மெரினாவிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.