சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ன் வழித்தடம் 3-ல், கிரீன்வேஸ் சாலை மற்றும் மந்தைவெளி நிலையம் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் செப்டம்பர் 2023-ல் தொடங்கின. 'நொய்யல்' மற்றும் 'வைகை' என்ற இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. 'வைகை' இயந்திரம் அக்டோபர் 18, 2025 அன்று பணியை முடித்தது. 'நொய்யல்' இயந்திரம் இன்று (07.02.2026) 763 மீட்டர் நீள சுரங்கம் அமைக்கும் பணியை வெற்றிகரமாக முடித்து மந்தைவெளி நிலையத்தை அடைந்தது.