மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று தன்னை கூறி வரும் ஜெயலட்சுமி, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளதாகவும், அதற்கான நேர்காணலுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்த நிலையில், அதிமுகவினர் அவரை அங்கிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.