சென்னை ராயப்பேட்டை, முத்தையா தோட்டம் தெரு - வி. பி. , ராமன் சாலை சந்திப்பில், நேற்று காலை போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட ராயப்பேட்டையைச் சேர்ந்த பாரதி என்ற பெண், ஐஸ்ஹவுஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 88 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.