மந்தைவெளி மேம்பால ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட அபிராமபுரம் போலீசார், பைக்கில் பட்டாக்கத்திகளுடன் வலம் வந்த அஜய் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், அவர்கள் ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இந்நிலையில், நேற்று அல்போன்சா மைதானம் அருகே கத்தியை வாங்க காத்திருந்த மகேந்திரன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.