சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சாலையோரம் துாங்கி கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு, 2023ல், சாகுல் அமீது என்ற காசிம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், போலீசார் சாகுல் அமீது மீது வழக்குப்பதிவு செய்தனர். சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ். பத்மா முன் நடந்த விசாரணையில், சாகுல் அமீது மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 75,000 ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.