
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில்: இன்று சோதனை ஓட்டம்
வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சிறப்பு ரயில் மூலம் நாளை மதியம் 2 மணி முதல் 5:30 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. முதன்மை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் நடக்கும் இந்த சோதனை ஓட்டத்தின் போது, ரயில் தண்டவாளங்களை யாரும் நெருங்கவோ அல்லது அதன் அருகில் வேலை செய்யவோ கூடாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.













