சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் 'கில்லர்' திரைப்படப் படப்பிடிப்பின் போது, இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சியை படமாக்கும்போது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.