அம்பத்துார் தொழிற்பேட்டை 8வது தெருவில் உள்ள இரும்பு பொருட்கள் தொழிற்சாலையில், சூடான இரும்பு பொருட்களை குளிரூட்டும் போது ஆயில் தீப்பற்றி தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலை ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், அம்பத்துார் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுமார் 20 நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.