அடையாறில் குதித்தவர் 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

325பார்த்தது
அடையாறில் குதித்தவர் 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு
சென்னை கொளத்துார், பூம்புகார் நகரைச் சேர்ந்த 55 வயதான எத்திராஜ், ஜார்ஜ்டவுன் தபால் நிலைய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 12 ஆம் தேதி, பசுமைவழி புறச்சாலை மேம்பாலத்திலிருந்து அடையாறு ஆற்றில் குதித்த அவர், திரு. வி. க பாலம் அருகே நேற்று காலை மிதந்த நிலையில் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி