கே. கே. நகரில் அரசியல் கூட்டம் நடத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி

0பார்த்தது
கே. கே. நகரில் அரசியல் கூட்டம் நடத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை கே. கே. நகரில் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த தடை கோரி குடியிருப்போர் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவிசங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தலைமை நீதிபதி எஸ். ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு, 2024ல் நடந்த கூட்டத்தை சுட்டிக்காட்டி வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், சமீபத்தில் எங்கு, எப்போது கூட்டம் நடத்தப்பட்டது என்ற விவரம் மனுவில் இல்லாததால், இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி