சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, நடிகை குஷ்புவை அவதூறாகப் பேசியதாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது எழும்பூர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். ஆதாரங்கள், சாட்சியங்களை முறையாகப் பரிசீலிக்காமல் நீதிமன்றம் தண்டனை வழங்கியதாகவும், பாதிக்கப்பட்ட தனிநபர்கள் யாரும் வழக்கு தாக்கல் செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.