சென்னை விமான நிலைய போலீசார், அஜர்பைஜானில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக இணையதளத்தில் போலி விளம்பரம் செய்து 4 பேரிடம் 6 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சுடலை குமார் என்பவரை கைது செய்துள்ளனர். சுடலை குமார், பாதிக்கப்பட்டவர்களிடம் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு போலியான பணி நியமன ஆணைகளையும், இ-விசாகளையும் கொடுத்ததாக கூறப்படுகிறது. டெல்லி விமான நிலையத்துக்கு சென்றபோது குடியுரிமை அதிகாரிகள் சோதனையில் ஆவணங்கள் அனைத்தும் போலி என தெரியவந்தது.