சென்னை: படகு மூழ்கி தத்தளித்த மீனவர்கள் மீட்பு

84பார்த்தது
சென்னை: படகு மூழ்கி தத்தளித்த மீனவர்கள் மீட்பு
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஸ்ரீதர் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் காசிமேடு காசிமாநகர் 3-வது தெருவைச் சேர்ந்த ராஜா(61), அதே பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி(60), சேகர், ஜெகன், விஜயமூர்த்தி, சுதாகர் ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். சென்னை கடற்கரையிலிருந்து சுமார் 58 கடல் மைல் தொலைவில் கடந்த 1-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது காற்று வேகமாக வீசியுள்ளது. கடலடி நீரோட்டமும் வேகமாக இருந்துள்ளது. 

இதனால், படகில் இருந்து வலையோடு கடலுக்குள் வீசப்பட்டிருந்த கயிறு பாறையில் சிக்கி கவிந்துள்ளது. உடனே படகில் இருந்த 6 பேரும் கடலில் குதித்தனர். பின்னர், மிதவை மூலம் கரையை நோக்கிப் புறப்பட்டனர். ஆனால் ராஜாவும், மாசிலாமணியும் கடலில் நீந்த முடியாமல், அங்கேயே சிக்கிக் கொண்டனர். மீதி 4 பேரும் கடலில் நீந்தி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா அருகே கரையேறினர்.

தொடர்புடைய செய்தி