சென்னை மாநகரப் பேருந்தில் சில்லறை விவகாரம் தொடர்பாகப் பயணியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட நடத்துநர், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டிருந்த அவர், விதிமுறையை மீறியதாலும், UPI பரிவர்த்தனை செய்ய முன்வந்த பயணியை ஒருமையில் பேசி பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.