சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, சென்னையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சார டபுள் டெக்கர் பேருந்து சேவை நாளை (12.01.2026) முதல் மீண்டும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அடையாறு முதல் மாமல்லபுரம் வரை இந்த சேவை இயக்கப்படும். முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இந்த புதிய சேவையை தொடங்கி வைக்கிறார்.