சென்னை: இரவுமுழுவதும் உல்லாசமாக இருந்த தோழி - நகையுடன் எஸ்கேப்

71பார்த்தது
சென்னை: இரவுமுழுவதும் உல்லாசமாக இருந்த தோழி - நகையுடன் எஸ்கேப்
சென்னை அடுத்த ஆவடி நாமராஜர் நகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மணி (47). தொழிலதிபரான இவர், வாரத்தில் 2 நாட்கள் அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் உள்ள பாரில் மது அருந்துவது வழக்கம். அதன்படி கடந்த 27ம் தேதி அந்த நட்சத்திர ஓட்டலில் உள்ள மதுபாரில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது ஏற்கனவே அறிமுகமான பெண் தீபிகா என்பவர் அந்த பாருக்கு வந்துள்ளார். 

இதைப் பார்த்த மணி அவருடன் பேசியுள்ளார். பிறகு இருவரும் ஒன்றாக பாரில் மது அருந்தியுள்ளனர். பிறகு இருவரும் அதே ஓட்டலில் 104 என்ற அறையை எடுத்து அன்று இரவு முழுவதும் உல்லாசமாக இருந்துள்ளனர். பிறகு உடல் சோர்வு காரணமாக தொழிலதிபர் மணி மறுநாள் காலை 10 மணிக்கு வரை எழுந்திருக்கவில்லை. பின்னர் மணி எழுந்து பார்த்தபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தங்கச் செயின் மாயமாகி இருந்தது. உடனிருந்த தோழி தீபிகாவும் மாயமாகி இருந்தார். 

இதைச் சற்றும் எதிர்பார்க்காத தொழிலதிபர் மணி தன்னுடன் இருந்த தீபிகாவைத் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் கடந்த 29ம் தேதி இரவு 9 மணிக்கு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின்படி உதவி ஆய்வாளர் மேத்யூ ரோஸ் சம்பந்தப்பட்ட நட்சத்திர ஓட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்த்து தலைமறைவான தீபிகாவைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி