சென்னை அசோக் நகரில், 45 வயதான டெய்லர் பாலமுருகன், தனது மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 17 ஆம் தேதி ஏற்பட்ட ஒரு சண்டையின் போது, ஆத்திரமடைந்த பாலமுருகன் தனது மனைவியை பிளேடால் சரமாரியாக தாக்கியுள்ளார். அக்கம்பக்கத்தினர் தலையிட்டு அவரை காப்பாற்றியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், அசோக் நகர் போலீசார் பாலமுருகனை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.