தாய்லாந்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். தாய்லாந்தில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய பயணி ஒருவரிடம் இருந்து, சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 6 கிலோ எடையுள்ள, ரூ.6 கோடி மதிப்புள்ள உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.