கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த அமுலு (43) என்பவருக்கும், அவரது கணவரின் சகோதரர் ஜீவானந்தம் (46) என்பவருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜீவானந்தம், அமுலுவை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அமுலு அளித்த புகாரின் பேரில், கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜீவானந்தத்தை கைது செய்தனர்.