சென்னையின் கோயம்பேடு பகுதியில் திருவேற்காட்டைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் நிறுத்தியிருந்த பைக்கிலிருந்து லேப்டாப்பை திருடியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், முன்னா (54), குபேந்திரன் (38), ராஜா (48) ஆகிய மூன்று பேர் கோயம்பேடு போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.