சென்னை அடையாறு மண்டலம், வார்டு-170-ல் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த வேதம்மாள் என்பவர், கோட்டூர்புரத்தில் சுமார் ரூ. 1,30,000 மதிப்புள்ள ஐபோனை கண்டெடுத்தார். அவர் பணி மேற்பார்வையாளர் உதவியுடன் கோட்டூர்புரம் ஜெ4 காவல் நிலையத்தில் அதை ஒப்படைத்தார். பின்னர், அந்த ஐபோன் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. தூய்மைப் பணியாளரின் இந்த நேர்மையான செயலை காவல்துறையினரும் மக்களும் வெகுவாகப் பாராட்டினர்.