காலி மது பாட்டில்களை திரும்பப் பெற ஆட்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. இதற்கிடையில், இன்று மதியம் 12 மணிக்கு சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படாததால், மது வாங்கச் சென்றோர் அதிர்ச்சியடைந்தனர்.