புளியந்தோப்பு: வீடு விற்பதாக கூறி ரூ.34 லட்சம் மோசடி.. ஒருவர் கைது

75பார்த்தது
புளியந்தோப்பு: வீடு விற்பதாக கூறி ரூ.34 லட்சம் மோசடி.. ஒருவர் கைது
புளியந்தோப்பு சிவராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவமணி (39). இவர், புளியந்தோப்பு நார்த் டவுன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க முடிவு செய்து, அங்குள்ள 650 சதுர அடி வீட்டை தேர்வு செய்து, ரூ. 34 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், வீட்டை இவரது பேருக்கு பத்திரப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். 

இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் சிவமணி கேட்டபோது, மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் கடந்த ஜூலை மாதம் சிவமணி இதுகுறித்து ஓட்டேரி குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில், சூளை ஹரி முத்து தெருவை சேர்ந்த மகேஷ் (50) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பாலாஜி, ரமேஷ்பாபு, துளசிதாஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி