சென்னை பழையவண்ணாரப்பேட்டை ஜி. ஏ ரோட்டில் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான டீ & கூல்ட்ரிங்ஸ் கடை இன்று (மே. 28) அதிகாலை 3.30 மணியளவில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் கடையில் இருந்த சுமார் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.