வனத்துறையின் மேற்பார்வையில் உள்ள பெசன்ட் நகர் குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாக்கப்பட்ட 94 முட்டைகளில் இருந்து 46 ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் வெற்றிகரமாக பொரித்துள்ளன. நல்ல நிலையில் இருந்த இந்த குஞ்சுகள் முதல் கட்டமாக பெசன்ட்நகர் கடலில் விடப்பட்டன. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதுகாக்கப்பட்ட முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்துள்ளன என்றார்.