சென்னையின் போரூர், செட்டியார் அகரம் சாலையில் உள்ள மின் வாரியத்திற்கு சொந்தமான 110 கிலோ வோல்ட் திறனில் இயங்கும் எஸ். ஆர். எம். சி. துணைமின் நிலையத்தில், நாளை காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் போரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மின் நுகர்வோர் பங்கேற்று, மின்தடை போன்ற மின்சாரம் தொடர்பான தங்களது குறைகளை மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.