ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவுக்கும் மேயர் பிரியாவுக்கு மோதல்

0பார்த்தது
ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவுக்கும் மேயர் பிரியாவுக்கு மோதல்
ஆர்.கே. நகரில் தொகுதி நிதி மேம்பாட்டில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடத்தை திறந்துவைத்த மேயர் பிரியா, குத்துவிளக்கு ஏற்ற மெழுகுவர்த்தியை எம்.எல்.ஏ. பல்லவிக்கு கொடுக்க மறுத்து ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் கொடுத்தார். இதனால் அதிருப்தி அடைந்த பல்லவி வெளியேறினார். மேயர் பிரியா, எம்.எல்.ஏ.வுக்கு ப்ரோட்டோகால் தெரியவில்லை என்றார். பின்னர் மற்றொரு நிகழ்ச்சியில், மேயர், எம்.எல்.ஏ பல்லவியிடம் மெழுகுவர்த்தியை கொடுத்தார். அவர் அதை வாங்காமல் நீங்களே எல்லா திரியையும் ஏற்றுங்கள் என கூறி எம்.எல்.ஏ மறுத்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.