சென்னை மாநகராட்சி ஊழியர்கள் இனி காலை மற்றும் மாலை என இருவேளையும் பயோ மெட்ரிக் முறையில் வருகைப் பதிவை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பணியின்போது வெளியில் செல்வோர் தங்களது இருப்பிடத்தை செயலி மூலம் பகிர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் மாநகராட்சி ஊழியர்களின் பணி நேரத்தை முறைப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் கொண்டுவரப்பட்டுள்ளன.