திருவிக நகரில் நடைபெற்ற பள்ளி திறப்பு நிகழ்ச்சியில் மேயர் பிரியா எம்.எல்.ஏ பல்லவியை குத்து விளக்கு ஏற்ற விடாமல் செய்ததாக சர்ச்சை எழுந்தது. அதற்கு பதிலளித்த எம்.எல்.ஏ பல்லவி கூறுகையில், நிகழ்ச்சிக்கு மேயர் வருவது நேற்று இரவு வரை உறுதி செய்யவில்லை. இன்று நான் வருவதை தெரிந்து தான் வேண்டுமென்றே வந்துள்ளார். என்னை அசிங்கப்படுத்தவே மேயர் வந்துள்ளார். மற்றொரு இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் என்னை ஏற்ற சொன்னார். ஆனால் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். மொத்தத்தில் என்ன அவமானம் படுத்தவே மேயர் வந்தார் என எம்.எல்.ஏ கூறினார்.